"எ.வ.வேலு போல் தி.மு.க.வில் வலிமையான தலைவர்களை பா.ஜ.க. தேர்தல் களத்தில் குறிவைக்கவுள்ளது' என நக்கீரன் அப்போதே வெளிப்படுத்திவந்தது.

Advertisment

tmalai

திருவண்ணாமலையில் "தணிகைவேலுக்கு சீட் தரக்கூடாது' என சென்னையைச் சேர்ந்த சில சிறிய தொழிலதிபர்கள் அவரை எதிர்க்கும் சில பா.ஜ.க. பிரமுகர்கள் மூலமாக டெல்லி தலைமை, ஆர்.எஸ்.எஸ். தலைமை வரை புகார் மனுக்களை தந்திருந்தனர். அந்தப் புகார்களை மீறி தணிகைவேல் திருவண்ணாமலை தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

அதிர்ச்சியுடன் நம்மிடம் பேசி யவர்கள், ""பணத்தினை வாரி இறைத்து தனக்கு தொகுதியில் பெரியளவில் செல்வாக்கு இருப்பதுபோல் தலைமைக்கு காட்டி, கட்சியில் வர்த்தகர் அணியின் மாநில துணைத்தலைவர் பதவியை வாங்கினார். அந்தப் பதவியை வைத்துக்கொண்டு உள்துறை அமைச்சர் அமித்ஷா, பிரதமர் அலுவலகம் வரை தனது தொடர்பை அதிகப்படுத்தினார். அதன்பின்னர் கட்சித் தலைவர்களுக்கு இவர்பற்றி வந்த தகவல்கள் அனைத்தும் அதிர்ச்சி ரகம்.

Advertisment

"10 லட்சம் தந்தால் 20 லட்சமாகத் திருப்பித் தருவேன்' என ஆசைவார்த்தை காட்டி சென்னை, கோவை, திருச்சி, மதுரையைச் சேர்ந்த பல பிரமுகர்களிடம் கோடிக்கணக்கில் பணம் வாங்கியவர், இரட்டிப்பாகவும் திருப்பி தரவில்லை, வாங்கிய அசல் பணத்தினையும் திருப்பி தரவில்லை. என்று எங்களுக்கு தெரியவந்தது.

அந்தப் பணத்தை சினிமா துறையில் முதலீடு செய்தும், சினிமா படம் எடுத்தது தெரிந்தது. அதன்பின்பே திமுக தலைமைக்கு நெருக்கமான வேலுவை தோற்கடிக்கும் அளவுக்கு இவருக்கு பலமில்லை, அதனால் இவருக்கு சீட் தரக்கூடாது என தேர்தல் பொறுப்பாளர், மாநில பொறுப்பாளர், எங்கள் கட்சி தலைமை வரை புகார் தந்து விசாரணை நடந்தது. மாநிலத்தில் உள்ள முக்கிய தலைவர் ஒருவர் சிபாரிசின் மூலமாக தணிகைவேலுக்கு திருவண்ணா மலை தொகுதி கிடைத்தது, அந்த பிரமுகரும் வேட்பாளர், அவருக்கான தேர்தல் செலவையும் இவரே பார்ப்பதாக வாக்குறுதி தந்து, சீட் வாங்கியுள்ளார்'' என்றார்கள் கவலையான குரலில்.

இதுப்பற்றி திருவண்ணாமலை தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் தணிகை வேலை நாம் தொடர்பு கொண்டு கேட்டபோது, ""எனக்கு சீட் கிடைக்கக்கூடாது என்பதற்காக சிலர் பொய்யான தகவல்களை எங்கள் கட்சி தலைமையிடம் சொல்லியுள்ளார்கள். அவர்கள் தி.மு.க.வின் ஆட்கள்'' என்றார்.